காட்டுப்பகுதியில் கிடந்த திமுக கவுன்சிலரின் சடலம் - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


காட்டுப்பகுதியில் கிடந்த திமுக கவுன்சிலரின் சடலம் - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் திமுக பிரதிநிதி ரூபா. சோளக்காளிபாளையம் 7வது வார்டு கவுன்சிலராக இருந்து வரும் இவர் அங்குள்ள சுற்றுவட்ட பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கரூரில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரூபா நேற்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர், இரவு ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரூபாவின் குடும்பத்தினர் அவர் வேலைக்கு செல்லும் வீடுகளில் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், ரூபா காலையில் இருந்து வேலைக்கு வரவில்லை என்றி வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, ரூபாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, கரூர் மாவட்டம் பாலமலையில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தின் காட்டுப்பகுதியில் அரைநிர்வாணமாக ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் படி போலீசார் விரைந்துச் சென்று சோதனை செய்த போது அது ரூபாவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் ரூபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk woman counsilar died in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->