இரவில் அதிக நேரம் கண் விழிக்க கூடாது.. முதல்வருக்கு மருத்துவர்கள் அறிவுரை.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து திமுகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மு.க ஸ்டாலின் உண்ணும் உணவில் கட்டுப்பாடு வேண்டும் என தெரிவித்த மருத்துவர்கள் அறிவுரைத்து உள்ளனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின் பல நேரங்களில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வது, தண்ணீரை குறைவாக அருந்துவது போன்ற காரணங்களால் வயிற்றில் உபாதை ஏற்பட்டுள்ளது. மேலும் காலை நேரத்தில் இட்லி சாம்பாரை விரும்பி சாப்பிடும் அதே வேளையில் புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதியை போல, வேர்க்கடலை, பாதாம், வேகவைத்த பயிறுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் சுற்றுப்பயணம் செல்லும் போது வெளி இடங்களில் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக எண்ணெய் உணவை தவிர்க்க வேண்டும். மதிய உணவை உட்கொண்ட பிறகு முதலமைச்சர் சற்று நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் அதிகமாக கண் விழிப்பதை தவிர்க்க வேண்டும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctors advise CM MKStalin not to stay awake for too long at night


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->