கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரண வழக்கில் முன்ஜாமின் கேட்டு டாக்டர்கள் மனு தாக்கல்!
Doctors filed anticipatory bail petition in the priya death case
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து ஆட்ட வீராங்கனை பிரியா கடந்த நவம்பர் 7ம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரியா ஆபத்தான நிலையில் கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரியா கடந்த 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் "கவன குறைவாக செயல்பட்டவர்கள் மீது அவரவர் பொறுப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை இருக்காது" என தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தரம் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமாறாக உள்ள டாக்டர்கள் சார்பில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரால் பட்டியலிடப்பட்டு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Doctors filed anticipatory bail petition in the priya death case