சென்னையில் தொடரும் நாய் கடி சம்பவங்கள்..வளர்ப்பு நாய் கடித்ததில் கணவன் மனைவி படுகாயம்!! - Seithipunal
Seithipunal


சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இரண்டு நாய்கள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். நாயிடம் கடி வாங்கிய சிறுமி தற்போது, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நாய் ,பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதற்கு கட்டாயமாக லைசன்ஸ் பெற வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று சென்னை ஆலந்தூரில் 11 வயது சிறுவனை நாய் ஒன்று கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சென்னையில் ஆங்காங்கே நாய் கடி சம்பவங்கள் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இரண்டு சம்பவங்களையும் தொடர்ந்து இன்று சென்னை சூளைமேட்டில் கடைக்கு சென்று திரும்பிய நீலா என்ற பெண்மணியை அப்பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவரின் வளர்ப்பு நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாயை தடுக்க முயன்ற அவரது கணவர் சுரேஷ் செய்யும் நாய் கடித்து உள்ளது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இது தொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dog bite incidents continue in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->