கடலூரில் பயங்கரம் - தூங்கி கொண்டிருந்த குழந்தையை பதம் பார்த்த தெரு நாய்.! - Seithipunal
Seithipunal


கடலூரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பிறந்து ஒரு மாதம் ஆகும் குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளது. குழந்தையின் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நேரத்தில், தெரு நாய் ஒன்று வீட்டிற்குள் புகுந்து குழந்தையை கடித்து குதறியுள்ளது. அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தோட்டத்தில் இருந்து தாய் ஓடி வந்து பார்த்துள்ளார்.

அங்கு குழந்தை ரத்தத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளது. உடனே தாய் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக குழந்தை வழியிலேயே உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாகவே தமிழகத்தில் தெருநாய் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dog bite one month baby in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->