சிறுமியை கடித்துக் குதறிய நாய்கள் - உரிமையாளர் குடும்பத்தை தட்டி தூக்கிய போலீஸ்.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் பணிபுரியும் காவலரின் மனைவி சோனியா மற்றும் அவரது மகள் சுதக்ஷா ஆகியோர் பூங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசித்து வரும் புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய்கள் இருவரையும் கடித்துள்ளது. 

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். 

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ராட்வைலா இன நாய்களை வளர்த்ததாகவும், இதனால் புகழேந்தியின் மனைவி மற்றும் அவரது மகன் மீதும் இரண்டு பிரிவினுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dog owner arrested forp bit girl in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->