குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடிகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!
Domestic explosions in the residential area Public shock
நத்தம் செந்துறை சாலை ஓரம் கிடந்த குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடிகல் கிடந்துள்ளது. இதனால் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செந்துறை சாலை ரோடு ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள கலைநகர் குடியிருப்புப் பகுதி உள்ளது.
அப்பகுதியில், இன்று காலை சாலையின் அருகே 20-க்கும் மேற்பட்ட சணலால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகள் சிதறிக் கிடந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நத்தம் போலீஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீஸார் சிதறிக் கிடந்த சணலால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகளை அங்கிருந்து பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர்.
மேலும் நத்தம் அருகே நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், இதனை தொடர்ந்து இன்று குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு அருகிலேயே நாட்டு வெடிகள் கிடந்தது அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நத்தம் போலீஸார் குடியிருப்புப் பகுதிக்குள் நாட்டு வெடிகளை வீசிச் சென்ற அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Domestic explosions in the residential area Public shock