உடனடி லோன் ஆப்  மூலம் கடன் வாங்க வேண்டாம் - சைபர் க்ரைம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2023 ஆம் ஆண்டு புதுச்சேரி சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் உடனடி கடன் பெறவேண்டி, செல்போனில் ஒரு உடனடி கடன் ஆப்பை டவுன்லோடு செய்து, அதன்மூலம் ஆப் மூலம் ரூ. 10,000/- பணம் வாங்கிநார். அவர் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனிற்கு, வட்டி மேல் வட்டி சேர்த்து போட்டு, அவரிடமிருந்து இரண்டு லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்திய பெற்றுள்ளனர். 

இருப்பினும், புகார்தாரரை, விடாமல் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, அவருடைய செல்போன் தொடர்பாளர்கள் (contact list) அனைவருக்கும் அனுப்பி மிரட்டி பணம் பறித்துக் கொண்டே இருந்தனர் என்று அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். 

புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 230 க்கும் மேற்பட்ட ஆவணங்களை திரட்டப்பட்டது. மேலும், வங்கி விவரங்கள், செல்போன் விவரங்கள், வாட்ஸ்-ஆப் விவரங்கள் டெலிகிராம் பற்றிய தகவல்கள் மற்றும் செல்போன்கள் யார் யார் பேரில் வாங்கப்பட்டது, எந்தெந்த ஊரில் இருந்து குற்றவாளிகள் செயல்படுகின்றனர் பணம் முதலில் எங்கு செல்கிறது என்பது போன்று பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட தொடர் விசாரணையில், இந்தியா முழுவதும் 14 நபர்கள் இந்தத் தொடர் மோசடியில் ஈடுபட்டதை அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இது சம்பந்தமாக இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு நாரா சைதன்யா IPS அவர்களுடைய உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின் பேரில் விசாரணையின் அடுத்த கட்டத்திற்கான பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டது. பின்னர், முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுபடி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது தனிப்படையில், உதவி ஆய்வாளர் சந்தோஷ், தலைமை காவலர் மணிமொழி, காவலர்களான ஜலாலுதீன், ரோஸ்லின்மேரி, பாலாஜி, அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த விசாரனையில், முதலாவது குற்றவாளியாக முகமது ஷாபி வயது 37 என்பவர் நேற்று கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரித்த போது அவருடைய மூன்று வங்கி கணக்குகளில் மட்டும் 10 கோடியே 65 லட்ச ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 மேலும், அவரிடம் வங்கி கணக்கை வாங்கிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த 14 நபர்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் சேர்த்து 300 கோடி ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனைகள்  நடந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்தது. மேற்படி பணங்கள் அனைத்தும் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வருகின்ற குற்றவாளிகள் பிடித்தால் அந்த கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு சென்றது என்ற விவரங்கள் தெரிய வரும். மேற்படி கைது செய்யப்பட்ட முகமது ஷாபியிடமிருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், புதுச்சேரி சைபர் கிரைம்  காவல் நிலையம், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கண்டுபிடிக்கப்ட்ட சித்தன் முகேஷா அவர்களிடமிருந்து Enforecement Directory ரூ. 331 கோடி பணத்தை முடக்கி வைத்துள்ளனர். மேலும், மற்ற குற்றவாளிகளான ஷெரிப் மற்றும் நஷிப் ஆகியோரும் விசாரணையில் மேலும், மற்ற குற்றவாளிகளான ஷெரிப் மற்றும் நஷிப் ஆகியோரும் விசாரணையில் அடையாளம் காணப்பட்டு, அவர்களும் இவ்வழக்கில் சம்மந்தபட்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர்.

இது சம்பந்தமாக இணைய வழி முதுநிலை காவல்  கண்காணிப்பாளர் திரு.நாரா சைத்தானியா IPS பொதுமக்களுக்கு கூறுவது என்னவென்றால் செல்போனில் வருகின்ற உடனடி கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் வாங்க வேண்டாம் என்றும், கடன் வாங்கிய அனைத்து நபர்களுமே அவர்களுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டப்படுகின்றனர். மேலும், அந்த மார்பிங்க் செய்த புகைப்படங்கள் அவர்களுடைய உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி பல மடங்கு அதிகமாக பணத்தை பறிக்கப்படுகுவது மேற்படி இணைய வழி மோசடி காரர்களின் வேலையாகும். ஆகவே பொதுமக்கள், உடனடி லோன் ஆப்-பிள் இருந்து கடன் வாங்க வேண்டாம் என இணைய வழி காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது என்றார். மேலும், இதுபோன்று புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் அறிவுறுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don t take loans through instant loan app: Cyber Crime Alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->