தமிழக அரசு வன்மத்துடன் செயல்படுகிறது - அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் வன்மத்துடன் செயல்பட்டு வருவதாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் தெரிவிக்கையில். "எம்பிசி பட்டியலில் வன்னியர்கள் 10.5 சதவீதத்திற்கும் அதிகமாக இட ஒதுக்கீடு பெறுவதாக பொய்யான ஒரு செய்தியை தமிழக அரசே பரப்பி வருகிறது.

சமூகநீதி மீது அக்கறையுடன் இருந்தவர், செயல்பட்டவர் கலைஞர். ஆனால், முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசு சமூக நீதிக்கு எதிராக ஒரு வன்மத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

தமிழக காவல்துறையின் 109 உயர் அதிகாரிகளில் ஒருவர்தான் வன்னியர். மேலும் 123 அரசு துறை செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை.

இப்படி தமிழக அரசின் உயர் பதவிகளில் வன்னியர்கள் 0.0001% மட்டுமே இருக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில் தமிழக அரசு பணிகளில் வன்னியர்கள் 10.5 சதவிகிதத்தை விட கூடுதலாக இருப்பது போல் பொய் பரப்புவது ஏன்? 

பதவி உயர்வு மூலம் பணியாளை பெற்ற வன்னியர்களையும், இட ஒதுக்கீடு பட்டியலில் இணைத்து தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் எம்பிசி பட்டியலில் சமூகவாரியான இட ஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் வன்னியர்கள் 23 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற பெற்றுள்ளனர். அதில் மூன்று பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மிகக் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட சமூகத்தினருக்கு அதிக அமைச்சர்களை வழங்கிய திமுகவிற்கும் சமூகநீதிக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Condemn to DMK Govt for Reservation issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->