திமுக சொன்னாலும் துரைமுருகன் பேசமாட்டார். ஆனால்... போட்டுடைத்த அன்புமணி!
Dr Anbumani Ramadoss PMK Say About DMK Social Justice
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸிடம், கடந்த இரண்டு நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் கூட்டம் நடத்திய அமைச்சர்கள் அனைவருமே வன்னியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் தான். தொடர்ந்து பாமக மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள்? இந்த சமுதாயத்திற்கு பாமக எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்? இதுபற்றி உங்கள் பதில் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்க்கு பதிலளித்த அன்புமணி இராமதாஸ், "நீங்கள் சொல்கின்ற வன்னியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், இன்று அமைச்சர்களாக இருப்பதற்கு காரணமே பாட்டாளி மக்கள் கட்சி தான். பாமக இல்லை என்றால் அவர்கள் இன்று அமைச்சராகவே இருக்க முடியாது. அந்த அமைச்சர் பொறுப்பை அவர்களுக்கு வழங்க மாட்டார்கள். திமுகவும் சரி, அதிமுகவும் சரி, இரண்டு கட்சிகளிலும் அமைச்சர்களாக வேண்டுமென்றால் அதற்கு பாமக தான் காரணம்.
ஆனாலும், தேர்தல் வந்தால் பாமகவை இழிவாக பேசுவது திமுகவின் வழக்கம். சமுதாய ரீதியாக எங்களை இழிவு படுத்துவார்கள். திமுகவில் இருக்கக்கூடிய வன்னியர்களை வைத்து எங்களை தாக்குவார்கள், பேசுவார்கள். இதுதான் அவர்களின் வேலை. ஆனால் இதை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் என்ன பேசினாலும் மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு திமுகவின் எப்படிப்பட்டவர்கள் என்று நன்றாகவே தெரியும். அவர்களில் போலி பேச்சையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
தேர்தல் நேரத்தில் திடீரென அவர்களுக்கு வன்னியர் சமுதாயம் மீது அக்கறை வரும். தேர்தல் வந்தால் மணிமண்டபம் கட்டுவோம் என்பார்கள். மணி மண்டபம் கட்டி என்ன ஆகப்போகிறது? அது ஒரு கட்டிடம், அவ்வளவுதான். அதனால் இந்த மக்களுக்கு படிப்பு வந்துவிடுமா? இந்த மக்களுக்கு வேலை கிடைத்து விடுமா? இந்த மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்குமா? முன்னேறி விடுவார்களா? அதுவும் இந்த மணி மண்டபம் காட்டுவோம் என்றுதான் அறிவித்து உள்ளார்கள். இது எல்லாம் ஒரு விளம்பர அரசியல்.
நாங்கள் தியாகிகளுக்கு பென்ஷன் கொடுக்கிறோம் என்கிறார்கள். என்ன பென்ஷன் கொடுத்தீர்கள்? எவ்வளவு கொடுத்தீர்கள்? 3000 ரூபாய். ஒரு தியாகின் குடும்பம் இன்று எவ்வளவு பெரிய குடும்பமாக இருக்கிறது என்று தெரியுமா? ஒரு தியாகியின் குடும்பத்தின் 100 பேர் உள்ளனர். நீங்கள் கொடுக்கின்ற 3000 ரூபாய் எத்தனை பேருக்கு போகும்.
அவர்களின் தியாகம் எதற்காக? அவர்களின் மக்களுக்கு கல்வி வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும், வாழ்வாதாரம் வேண்டும் என்று தான் அவர்கள் உயிரை தியாகம் செய்தார்கள். அதை விட்டுவிட்டு மூவாயிரம் கொடுக்கிறோம், மணிமண்டபம் கட்டுகிறோம் என்றால்? வேண்டாம். அந்த சமுதாயத்திற்கு, அவர்கள் தியாகத்திற்கு இட ஒதுக்கீடை அறிவியுங்கள். சமூக நீதியை நிலைநாட்டுங்கள். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துங்கள். அதைத்தான் கேட்கிறோம். அதுதானே உண்மையான சமூக நீதி.
நாங்கள் இதுவரை அதிகாரத்திற்கு வரவில்லை. அதிகாரத்திற்கு வராமலேயே நாங்கள் நிறைய செய்து உள்ளோம். நாங்கள் செய்வதை நாங்கள் விளம்பரப்படுத்துவதில்லை. வருடா வருடம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்து வருகிறோம். அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு என பல செய்துள்ளோம். செய்வதை சொல்லிக் காட்டுவதை நான் தவறாக எடுத்துக் கொள்கிறேன். நாங்கள் செய்வதை சொல்லிக்காட்டுவதில்லை. இது அனைத்தையும் அதிகாரங்கள் இல்லாமல் செய்து காட்டி இருக்கிறோம்.
நீங்கள் என்ன செய்தீர்கள்? 3000 பென்ஷன் கொடுத்து இருக்கிறீர்கள். இந்த 3000 ரூபாயை எத்தனை பேர் பிரித்துக் கொள்வார்கள்.
ஜெகத்ரட்சகனை பேச சொல்கிறார்கள். அவர் பேசுகிறார். அவர் என்ன செய்தார்? என்று கேள்வி கேட்பதென்றால் நாங்களும் கேட்போம். எவ்வளவோ கேட்போம்.
அடுத்து எம்ஆர்கே, சிவசங்கர் பேசுவார். துரைமுருகனை பேச சொல்வார்கள். அவர்கள் சொன்னாலும் துரைமுருகன் பேச மாட்டார். நாகரீகமாக நடந்து கொள்வார். இதுதான் திமுகவின் தேர்தல் வியூகம்.
கட்சிகள் முக்கிய பொறுப்பில் உள்ள வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யார் இருக்கிறார்களோ, அவர்களை வைத்து தான் பாட்டாளி மக்கள் கட்சியை இழிவுபடுத்த நினைப்பார்கள். இதுதான் திமுகவின் கொள்கை" என்று அனபமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Dr Anbumani Ramadoss PMK Say About DMK Social Justice