ஆஷாக்கள் இந்தியாவின் பெருமை.... எனது பெருமிதம் : மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!
Dr Anbumani Ramadoss Say About ASHA
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அறிவித்துள்ள ’’6 உலக சுகாதார தலைவர்கள்” விருதுகளில் ஒன்று இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களான ஆஷாக்களுக்கு (ASHA) கிடைத்திருக்கிறது. இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கிறது!
இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியவர்களில் ஆஷாக்களின் பங்கு முக்கியமானது. உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சிய நிலையில், ஆஷாக்கள் தான் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து சிகிச்சையளித்தனர். அது தான் கொரோனாவை ஒழித்தது!
கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது தான் ஆஷாக்கள் திட்டம் உருவாக்கப்பட்டது. எனது காலத்தில் தான் 8.06 லட்சம் ஆஷாக்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் கொரோனா ஒழிப்பு பணிக்காகத் தான் இந்த விருது!
கொரோனா ஒழிப்புக்காக WHO விருது வென்றுள்ள ஆஷாக்கள் இந்தியாவின் பெருமை. அவர்களை உருவாக்கியவன் என்ற முறையில் அவர்கள் எனது பெருமிதம். சாதனை படைத்த 10 லட்சம் ஆஷாக்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About ASHA