5 மாதம் ஆகிவிட்டது! வேங்கைவயல் குற்றவாளிகள் யார்? சைலேந்திரபாபுவுக்கு அன்புமணி இராமதாஸ் கேள்வி! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை: கொலைக்குற்றத்தை விட கொடியக் குற்றத்திற்கு காரணமானவர்களை காவல்துறை தண்டிப்பது எப்போது? என்று, வேங்கைவயல் விவகாரத்தை சுட்டிக்காட்டி, பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  நடந்த இரட்டைக் கொலை வழக்கில் துப்புதுலக்கி, கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இது மிகவும் சரியான செயல். ஊக்குவிப்பு தான் காவல்துறையினருக்கு உத்வேகம் அளிக்கும். நானும் பாராட்டுகிறேன். 

அதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தினரின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுங்குற்றம் நிகழ்ந்து இன்றுடன் 5 மாதங்கள் 6 நாட்களாகிவிட்டது. 

அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பாரா?" என்று அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About vengaivayal issue may 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->