மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்க சென்ற டாக்டர் கிருஷ்ணசாமி தடுத்து நிறுத்தம்!
Dr Krishnasamy who went to meet Mancholai workers was stopped
மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்க சென்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சாலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரித்து வந்த தொழிலாளர்களுக்கு விருப்பஓய்வு வழங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய தனியார் தேயிலை நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.
தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டங்களை உறுதிப்படுத்தப்படும் வரை தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதற்காக சென்றார்.
அப்போது அவரது காரை மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் புதிய தமிழகம் கட்சி தொண்டர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாஞ்சோலைக்கு செல்ல வனத்துறை சார்பில் மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சி நிர்வாகி இல்லாமல் அதிக வாகனங்களில் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Dr Krishnasamy who went to meet Mancholai workers was stopped