டெல்லி ஜேஎன்யு தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் - டாக்டர் இராமதாஸ் கண்டனம்!
Dr Ramadoss Condemn JNU TN Students attack
"டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது" என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்க்கழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை.
பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது; அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுத்த கண்டன செய்தியில், "பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமல்ல கருத்து வேறுபாடுகள், விவாதங்களுக்கான இடமும் கூட. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்களை கோழைத்தனமாக தாக்கி, பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களை சூறையாடிய ஏபிவிபி அமைப்பினரின் செயல் கண்டனத்துக்குரியது.
அவர்கள் மீது நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தங்களது உரிமைக்காகவும், ஒன்றிய பாஜக பாஜகவுக்கு எதிராகவும் போராடும் மாணவர்கள் மீது, தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து விடுவதை டெல்லி காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dr Ramadoss Condemn JNU TN Students attack