தமிழக அரசே இது நியாயமல்ல! மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ளுங்கள் - மருத்துவர் இராமதாஸ் அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த கல்லாத்தூர் மின் ஊழியர் குடும்பத்திற்கு, ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று, தமிழக அரசை பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  ஒன்றியம் கல்லாத்தூரைச் சேர்ந்த மின்வாரியப் பணியாளர் செந்தில்குமார் என்பவர்  பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த மின்வாரியப் பணியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கல்லாத்தூரைச் சேர்ந்த மின்வாரியப் பணியாளர் செந்தில்குமார் மரணச் செய்தியறிந்து  பெரும் அதிர்ச்சியும்,  வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணியில் இருக்கும் போது  செந்தில்குமாருக்கு ஏற்பட்ட இறப்புக்கு மின்சார வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. 

ஆனால்,  மறைந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது நியாயமல்ல. 

மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது. செந்தில் குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Kallatho Senthilkumar Death TNGovt MKStalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->