உதட்டளவில் உச்சரிக்கும் சக்திகளுக்கு உண்மையான சமூகநீதியை இந்த நாள் கற்றுத் தரட்டும் - பாமக நிறுனவர் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


வி.பி.சிங் 94-ஆம் பிறந்தநாள்:  உதட்டளவில் உச்சரிக்கும் சக்திகளுக்கு உண்மையான சமூகநீதியை இந்த நாள் கற்றுத் தரட்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வி.பி சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகினறனர்.

அந்தவகையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னாள் பிரதமர் விபி.சிங் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் புரட்சி அத்தியாயத்தை எழுதியவரும், எனது நண்பருமான வி.பி.சிங் அவர்களின் 94-ஆம் பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும்,  ஆட்சியே போனாலும் பரவாயில்லை....  அறிவித்தவாறு  மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான  27%  இட ஒதுக்கீட்டை செயல்படுத்திக் காட்டியவர் வி.பி.சிங்.  அவர் தான் உண்மையான சமூகநீதியின் அடையாளம்.  அது தான் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறை.

ஆனால், உச்சநீதிமன்றமே ஆணையிட்டாலும் கூட சமூகப்படிநிலையின் அடித்தளத்தில் கிடக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பவர்களின் கைகளில் தான் இன்றைக்கு ஆட்சி, அதிகாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது.  அவர்களுக்கு சமூகநீதி என்பது உதட்டளவிலான உச்சரிப்பு தானே தவிர, உள்ளத்தளவிலான உணர்வு அல்ல.

அத்தகையவர்களுக்கு  உண்மையான சமூகநீதி என்ன? என்பதை வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் - வரலாறு கற்றுத்தரட்டும். இவர்கள் ஏற்படுத்தும் தடைகளை முறியடித்து மத்தியிலும், மாநிலத்திலும் 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற சமூகநீதி இலக்கை அடைவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், போராடவும் வி.பி.சிங் பிறந்தநாளில் நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்போம் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss wishes former PM VP Singh on his birthday


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->