திராவிட ஒழிப்பு மாநாடு! கைது செய்யப்பட்ட தமிழர் குடிகள் கூட்டமைப்பு! - Seithipunal
Seithipunal


தமிழர் குடிகள் கூட்டமைப்பு சார்பாக, பூந்தமல்லி வைத்தி தோட்டத்தில் உள்ள ராணி கல்யாண மண்டபத்தின் உள்அரங்கில் இன்று காலை 10 மணியளவில் திராவிட ஒழிப்பு மாநாடு நடக்க இருந்தது.

கடந்த 25.08.2023 ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் தமிழர் குடிகள் கூட்டமைப்பு சார்பில் திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஆவடி நாகராசன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் என்பவர், திராவிடத்தை அழிக்கும் நோக்கத்துடன் செயல்படும் இக்கூட்டத்தின் மூலம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட வாய்ப்பட உள்ளகாக எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், திராவிடத்திற்கு எதிராக உள்ளரங்கில் கூட்டம் நடத்தினால் திராவிட மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினை இந்த அரங்கில் ஏற்பட வாய்ப்புள்ளதால் தங்களது கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக பூந்தமல்லி காவல் நிலைய காவல் ஆய்வாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அனுமதி மறுத்த போதிலும் திட்டமிட்டபடி திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dravidian against Maansaadu issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->