"ஐயோ சீக்கிரமா திறங்க." "35 லட்சம் நஷ்டமாயிடுச்சு." தாலுகா ஆபிசில் மதுபிரியர்கள் வேதனை.!
DRINKERS PROTEST ABOUT THIRUVANNAMALAI TASMAC OPEN
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் அமைந்திருக்கும் படவேடு சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று இருந்துள்ளது. இதில், அன்றாடம் எக்கச்சக்கமான மதுப்பிரியர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த டாஸ்மாக் கடை சமீபத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை விநாயகபுரம் கிராமத்தில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி பெண்கள் இங்கே டாஸ்மாக் அமைக்க கூடாது என்று வட்டாட்சியரிடம் சென்று மனு கொடுத்தார்கள்.
இத்தகைய நிலையில் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை மது பிரியர்கள் முற்றுகையிட்டனர். டாஸ்மாக் கடையை சீக்கிரம் திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் இந்த டாஸ்மாக் கடையை அகற்றிய காரணத்தால் இதுவரை அரசுக்கு 35 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
DRINKERS PROTEST ABOUT THIRUVANNAMALAI TASMAC OPEN