காரில் மூட்டை மூட்டையாக இருந்த போதைப் பொருட்கள்.. சுங்கச்சாவடியில் பரபரப்பு....!
Drugs found in bundles in the car toll booth
வாணியம்பாடி அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அக்காரில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காரில் இருந்து இரண்டு நபர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் ராஜஸ்தானை சேர்ந்த திலீப் சிங் மற்றும் ரமேஷ் குமார் என்பது தெரிய வந்தது. இவர்கள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு 500 கிலோ போதை பொருட்கள் கடத்தி செல்வதாக தகவல் வெளியானது.
இதனை அடுத்து அம்பலூர் காவல் துறையினர் 500 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து திலீப் சிங், ரமேஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து காவலில் அடைக்கப்பட்டனர்.
English Summary
Drugs found in bundles in the car toll booth