தமிழகத்தில் பிடிப்பட்டது 10 டன் போதைப்பொருள்!
Drugs from Malaysia in white cement container
ஒயிட் சிமெண்ட் கண்டைனரில் மலேசியாவில் இருந்து வந்த போதைப் பொருள்!
இந்தியா முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் டன் கணக்கில் ஹெராயின் பிடிபட்டுள்ளது. தமிழகத்தில் கஞ்சா 2.0 என்ற திட்டத்தில் தமிழக காவல்துறை கஞ்சாவை டன் கணக்கில் பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் எடையுள்ள போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பிடிபட்டுள்ளது. இதை மதிப்பு சுமார் 1.76 கோடி ரூபாய் என தெரிய வருகிறது. பாப்பி விதைகள் எனப்படும் போதைப்பொருள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்தி வரப்படுவதாக மத்திய புலனாய்வு அமைப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அந்தக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தடைந்ததும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஒயிட் சிமெண்ட் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் கொண்டு வந்த கண்டனர் பெட்டியில் 100க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பாப்பி விதை எனப்படும் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த போதைப் பொருள் சட்டவிரோதமாக மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஒய்ட் சிமெண்ட் மூலப்பொருள் கொண்டுவரப்பட்ட கண்டெய்னர் இந்தியாவில் எந்த முகவரிக்கு வந்துள்ளது என மத்திய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துருக்கி மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நான்கு நாடுகளில் மட்டுமே பாம்பி விதை எனப்படும் இந்தப் போதை பொருள் உபயோகப்படுத்த அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Drugs from Malaysia in white cement container