தலைக்கேறிய மது போதை.. ஓடையில் விழுந்து கிடந்த குடிமகனால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் ஓடையில் விழுந்து கிடந்த ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் அருகில் உள்ள சீலப்பாடி பகுதியில் உள்ள ஓடையில் இன்று காலை ஒரு வாலிபர் உடல் மிதப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் உடலில் அசைவுகள் தெரியவே அவரை விரைவாக மீட்ட தீயணைப்பு துறையினர் அவரின் சட்டைபையில் இருந்த அடையாள அட்டையை பார்த்தனர்.  அவரின் அடையாள அட்டையில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்ப்பு கொண்டனர்.

 போதை ஆசாமியின் பெயர் முருகவேல் என்பதும் தனியார் மில்லில் லோடு மேனாக வேலை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து ஊரடங்கின் போது கள்ளதனமாக மது அருந்த நண்பருடன் வந்த போது ஒடையில் விழுந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drunken Person Falled in Water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->