சேலத்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த போதை ஆசிரியர் கைது..!!
Drunker teacher arrested for molesting student in Salem
சேலம் மாவட்டத்தை அடுத்த சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அஸ்தம்பட்டியை சேர்ந்த சுரேஷ்பாபு என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு குடித்துவிட்டு வேலைக்கு வருவதாக புகார் எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு போதையில் வந்த ஆசிரியர் சுரேஷ்பாபு ஒரு மாணவியிடம் கை, கால்களை பிடித்து விடும் படி கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவி பெற்றோர்கள் இடம் தெரிவித்த நிலையில் அவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவியரிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்தியது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று காலை மாணவிகள் கழிப்பிடம் அருகே நின்று சிகரெட் பிடித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் சுரேஷ் பாபுவை பள்ளி வளாகத்தில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுரேஷ்பாபு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் போதை ஆசிரியர் சுரேஷ்பாபுவை கைது செய்யதுள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Drunker teacher arrested for molesting student in Salem