புயல் எதிரொலி - மதுரையிலிருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் வடக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு மத்திய கடற்கரையில் ரீமால் புயல் கரையைக் கடப்பதால் மதுரையில் இருந்து 12.00 மணிக்கு துபாய் செல்வதற்காக 70 பயணிகளுடன் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காமல், பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் விமான சேவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். 

மேலும், பயணிகள் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பயணிகளின் வாக்குவாதத்தினால் ஊழியர்கள் பயணிகளின் பயண திட்டத்தை நாளை அல்லது நாளை மறுநாள் மாற்றம் செய்து தருவதாக அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dubai flight cancelled in madurai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->