குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு... ''ஆயுள் தண்டனை'' - துரை வைகோ பகீர் பேட்டி.!
Durai Vaiko says crimes complicit Politicians punished
ம.தி.மு.க முதன்மை செயலாளர் துறை வைகோ பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள், அரசாங்கம் என பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்து வருகின்றார்கள்.
இந்த நேரத்தில் இந்த சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய சர்ச்சை கருத்துக்களை சொல்லுவதும் உருவாக்குவதற்காக அரசியல் செய்வதில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 , 40 வருடங்களாக தொடர்ச்சியாக கள்ளச்சாராய மரணங்கள் நடைபெற்றுக் கொண்டதா இருக்கிறது.
இது ஒரு நாடு தழுவிய பிரச்சனை. பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பாஜக ஆளுகின்ற குஜராத் மாநிலம், பா.ஜ.க உடனே ஆட்சியமைக்கும் பீகாரிலும் கள்ளச்சாராய உயர இழப்புகள் தொடர்கதையாக உள்ளது.
இது போன்ற கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபவர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவருக்கும் குறைந்தபட்சம் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்.
அதற்கு ஏற்ப இந்த அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். இன்று இந்தியா முழுவதும் நீட் தேர்வு வேண்டாம் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்களவையில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது தமிழக மக்கள் மற்றும் திருச்சி தொகுதி மக்களுக்காக முக்கிய பிரச்சினைகளுக்கு கண்டிப்பாக குரல் எழுப்புவேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
Durai Vaiko says crimes complicit Politicians punished