தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் கட்டாயம்... தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


புதிய உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 87 நாடுகளில் பரவி உள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த ஒமைக்ரான் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

இந்தியாவில் 9 மாநிலங்களில் 83 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரசால் நம் நாட்டின் மூன்றாவது அலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.  ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மானில அரசு தீவிரமாக இறங்கி உள்ளனர். 

இதனிடையே, நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 12 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய நிலையான S ஜீன் இருப்பது கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

e pass for air travelers coming to tamilnadu from other state


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->