ஐயய்யயோ!!! ஊட்டி மற்றும் கொடைக்கானலில் இன்று முதல் இ-பாஸ் நடைமுறை...!!! - Seithipunal
Seithipunal


சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி,நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கபட்டுள்ளது. ஏப்ரல் 1-ந் தேதி (அதாவது இன்று) முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6,000  சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8000 சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்தது.

அவ்வகையில்  இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.  இந்த கட்டுப்பாடு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்பட 14 சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை செய்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

நீலகிரி வர விரும்புபவர்கள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதேபோல் கொடைக்கானலிலும் இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

உள்ளூர் வாகனங்களை தவிர தினமும் 4000  வாகனங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.எனவே கொடைக்கானல் நுழைவுவாயில் காமக்காபட்டி காவல் சோதனைச்சாவடி, பழனி வழியாக அய்யும்புள்ளி சோதனைச்சாவடி ஆகிய சோதனைச்சாவடிகளில் இன்று முதல் இ-பாஸ் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையே வாகன நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பஸ் நிலையம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தடுக்க அமைக்கப்படுகிறது.இதுதவிர அப்சர்வேட்டரி, ரோஸ் கார்டன், பிரையண்ட் பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்களும், காலி இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.

மேலும் சுற்றுலா பயணிகள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் கியூ.ஆர்.கோடு வசதி செய்யப்பட்டுள்ளது என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

E pass implementation Ooty and Kodaikanal from today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->