சென்னை புத்தான்டு கொண்டாட்டம்: அதிரடி தடைகள் - மக்களே கவனம்!
ECR NewYear2025 Chennai
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:
- இரவு 12 மணிக்குப் பிறகு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த முடியாது.
- புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல பெண்களை கேலி, கிண்டல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- டிசம்பர் 31 மாலை 6 மணிக்குப் பிறகு நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி இல்லை.
- கடற்கரை ரிசார்ட்களில் தங்கியுள்ளவர்கள், இரவு 12 மணிக்குப் பிறகு அறைகளுக்கு வெளியே வரக் கூடாது.
- ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் சிசிடிவி கேமரா கண்டிப்பாக செயல்பட வேண்டும்.
- அடையாள அட்டை இல்லாமல் அறைகள் வழங்கப்படக்கூடாது.
இத்தகைய விதிமுறைகளை செயல்படுத்த தங்கும் விடுதிகளின் பொது மேலாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.