போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் ஜாமின்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ED Case jaffer sadiq case bail chennai hc DMK
போதைப்பொருள் வழக்கில் போதை பொருள் கடத்தல் மன்னன் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.
2024 ஜூன் மாதத்தில், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம், மத்திய அமைச்சர் மணிஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாகக் கொண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கும் தீர்ப்பை அறிவித்தது.
வழக்கு தொடர்பான முழுமையான விசாரணை தொடரும் நிலையில், குற்றவியல் நடவடிக்கைகள் உரிய சட்ட வழிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் என்றும், ஜாமீனில் விடுவிக்கப்படுபவர்கள் வழக்கில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
English Summary
ED Case jaffer sadiq case bail chennai hc DMK