திமுக நிர்வாகி வீட்டிலிருந்த லாக்கர்! அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!
ED Raid in Vedachandur DMK Veera Saminadan houce
தின்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் வீரா சாமிநாதன் வீட்டில் நேற்றுமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
நேற்று மதியம் 2 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி நிலையில், தமுத்துப்பட்டியில் உள்ள சாமிநாதனின் தோட்டத்து வீட்டிலும் அமலாக்கத்துறையின் ஒரு குழு சோதனையில் இறங்கியது.
![](https://img.seithipunal.com/media/ED.png)
மாலை 6 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் வந்து அதே இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் இருந்த லாக்கர் சாவியை அதிகாரிகள் கேட்டுள்ளார். ஆனால், சாவி கோயம்புத்தூரில் இருந்துள்ளது.
இதனையடுத்து வீரா சாமிநாதனின் உதவியாளர் சூர்யா என்பவர் காரில் கொண்டு வந்து சாவியை ஒப்படைக்கவே, லாக்கரை திறந்து விடிய, விடிய சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது ஏராளமான திமுகவினர் குவிந்ததால், 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை இந்தசோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/ED 2023.png)
சாமிநாதன் சுமார் 25 மாவட்டங்களில் செந்தில்பாலாஜிக்காக டாஸ்மாக் பார் கலெக்ஷன் ஏஜெண்டாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் வீடு உள்பட கரூரில் 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய துணை ராணுவப் படையின் பாதுகாப்போடு, கரூரில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரின் (சங்கர்) வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.
English Summary
ED Raid in Vedachandur DMK Veera Saminadan houce