நடிகர் பிரகாஷ் ராஜூக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையின் கிளைகள் மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்தன. 

இந்த கடை நிர்வாகத்தினர் பல்வேறு புதிய நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது. 

இந்த திட்டங்களை பார்த்த பொதுமக்கள் பலரும் பணம் சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து முடிவடைந்த நிலையில் அதற்குரிய பணத்தையும் நகையையும் பிரணவ் ஜுவல்லரி வழங்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சோதனை நடத்தினர். 

மேலும் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளரான மதன் செல்வராஜ், அவரது மனைவி ஆகிய 2 பேரையும் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்ததாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையினருக்கு வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் கணக்கில் வராத 16. 60 கிலோ தங்க நகைகள் ரூ. 23.70 லட்சம் பணம் போன்றவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதனை தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரணவ் ஜுவல்லரி நகை கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் அமலாக்க துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது. 

அந்த சம்மனில் பிரகாஷ் ராஜ் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சில நாட்களில் பிரகாஷ்ராஜ் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைத்து ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED summon actor Prakash raj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->