தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பத்திலும், வேதனையிலும் தான் உள்ளார்கள் - எடப்பாடி பழனிசாமி பேட்டி..! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்ததாவது,

"அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும் வரை பொதுக்குழு கூட்ட மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம். சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. 

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத் திட்டப்பணிகளை தான் தற்போது தி.மு.க. தொடர்கிறது. எந்தவொரு புதிய மற்றும் பெரிய திட்டத்தையும் திமுக கொண்டுவரவில்லை. அ.தி.மு.க. அரசின் திட்டங்களையே தி.மு.க. திறந்து வைத்து வருகிறது. 

மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணம் மற்றும் சொத்து வரியை உயர்த்தியுள்ளது .மின் கட்டணம், சொத்து வரி உயர்வை மக்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? .தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பத்திலும், வேதனையிலும் தான் உள்ளார்கள்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanisamy press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->