''விவசாயிகளுக்கு பயன் இல்லாத பட்ஜெட்'' - எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்!
Edappadi Palaniswami comments TN agriculture budget
அ.தி.மு.க பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக சட்டசபைகளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையால் ஒரு பயனும் இல்லை. பல்வேறு துறைகளை சேர்த்து வேளாண் பட்ஜெட் என தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., நெல், கரும்பு தொடர்பான வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. பயிர் காப்பீடு திட்டத்தில் குருவை சாகுபடியை தி.மு.க ஆட்சியில் சேர்க்கப்படவில்லை.
குருவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கக் கூடியது. விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் குருவை சாகுபடி விவசாயிகள் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரில்லாமல் காய்ந்த சம்பா, தாளடி, சாகுபடி பயிலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட தாளடி, சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami comments TN agriculture budget