1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு எப்போது ? - முக்கிய தகவலை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.!
education department announce 1 to 9th class student annual exam time table
தற்போது தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதாவது, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 3ம் பருவ தொகுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு கட்டமாக நடத்தப்படுகிறது. அதன் பின்னர் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாள் தேர்வை தொடர்ந்து கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
அதாவது, 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் ஏப்ரல் 22-ம் தேதி முதல் தொடங்கும். 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 25-ம் தேதி முதல் தொடங்கும். விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
education department announce 1 to 9th class student annual exam time table