காலாண்டு விடுமுறை எப்போது? - மாணவர்களுக்கு வந்த குட் நியூஸ்.!
education department announce quarterly exam holiday
ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறை சார்பில், கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாட்காட்டியில் 220 வேலை நாட்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வேலைநாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டு, திருத்தப்பட்ட நாட்காட்டியையும் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன் படி தேர்வும் தொடங்கியுள்ளது.
பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு நேற்று காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு தொடங்க உள்ளது.
இந்தத் தேர்வு வருகிற 27-ந்தேதிக்குள் முடிவடைய உள்ளது. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
English Summary
education department announce quarterly exam holiday