ஒரத்தநாடு || பள்ளி மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் ஐந்து மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி சுமார் இரண்டு மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அப்பள்ளியில் வேலைபார்த்த ஆசிரியை ஒருவர், செல்போனில் புகைப் படம் எடுத்து மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்டற்கு, வகுப்பறையில் பேசி கொண்டு இருந்ததால் செல்லோ டேப் ஒட்டியதாக கூறியுள்ளார். 

உடனே பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜமிடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் தெரிவித்துள்ளதாவது:- கடந்த மாதம் 21ம் தேதி ஆசிரியர் வகுப்பில் இல்லாததால் ஒரு மாணவனை பார்த்து கொள்ளுமாறு கூறியுள்ளார்கள். அந்த மாணவன் தான் வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியுள்ளார். 

இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அவரது பெற்றோர் சம்பவம் குறித்து விசாரிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education officers investigation cello tape paste school students mouth in orathanadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->