அரண்மனை போல் காட்சியளிக்கும் எழும்பூர் ரயில் நிலையம்.. மிரள வைக்கும் மாதிரி புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 114 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இந்த ரயில் நிலையம் தெற்கு இரெயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. 

இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதனை கையாள, தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான வசதிகள் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட உள்ளது.

இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையம் எவ்வாறு மேம்படுத்தப்பட உள்ளது என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

734 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ள நிலையில், பணிகள் நிறைவுற்றப்பின், எழும்பூர் ரெயில் நிலையத்தின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் விதமாக சுவர் ஓவியங்கள், மின் நகர்வு படிக்கட்டுகளுடன் கூடிய நுழைவு வாயில், பயண சீட்டு வழங்கும் இடங்கள் உள்ளிட்டவற்றின் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரெயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Egmore railway station new model photo looks like a palace


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->