BSP கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் - சென்னையில் 8 பேர் சரண்.! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்த தாக்குல் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

அதன் படி சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் இதுவரைக்கும் 8 பேர் சரணடைந்தனர் என கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:- 

"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணை தான். விசாரணையை மேற்கொண்டு தீவிரப்படுத்தியதும் கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். 10 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் கிடைக்கும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight peoples surrander bsp leader amstrong murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->