போதைப்பொருள் விற்பனைக்கு உதவியாக இருந்த 18 போலீசார் பணிநீக்கம் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு.!
eighteen police officers dismiss for support drugs sale dgp sylendrababu order
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த பதினெட்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, "தமிழகத்தில் போதை பொருள் இல்லை என்ற நிலை 282 காவல் நிலையங்களில் ஏற்பட்டுள்ளது. போதை பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல்துறையை சேர்ந்த பதினெட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் போதை பொருள் நடமாட்டம் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் திருட்டு போய் மீட்கப்பட்ட அரை கிலோ தங்கம், 300 செல்போன்கள், ஐம்பது இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையில் முதன் முறையாக காலிபணியிடங்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில், 1 லட்சத்து 34 ஆயிரம் காவலர்கள், 15 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கடந்த 2021-ம் ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தற்போது 3,700 காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதேபோல், அதிகாரிகளை பொறுத்த வரையில் ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினோம்.
அதன் பின்னர் 444 உதவி ஆய்வாளர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். தமிழக காவல்துறையால் பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலி பெண்கள் மத்தியில் சரியாக போய் சேரவில்லை. இதன் காரணமாக காவல் செயலி குறித்து தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
eighteen police officers dismiss for support drugs sale dgp sylendrababu order