நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 18 பேர் கைது.!
eighteen tamilnadu fishermans arreste
சமீப காலமாகவே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடைப்படையினர் கைது செய்யும் சம்பவம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் பதினெட்டு பேரை இலங்கை கடற்படை எல்லைத்த தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது.
அதாவது, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த பதினெட்டு தமிழக மீனவர்களை மூன்று படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களை இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பதினெட்டு பேரும் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
eighteen tamilnadu fishermans arreste