மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! 50 வயது முதியவர் கைது.! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் பரமக்குடி போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் 50 வயதுடைய ரவீந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். சமையல்காரராக பணியாற்றி வரும் ரவீந்திரன் வழக்கமாக பணி முடித்து வரும்பொழுது மண்டபத்தின் கழிப்பறைக்கு அருகே 3 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.  

இதனையடுத்து, ரவீந்திரன் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்த சிறுமி அக்கம்பக்கத்தினரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் ரவீந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elder man arrest under Pocso act


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->