தமிழகம்/புதுச்சேரி 40 தொகுதிகளுக்கான காலை 10 மணி முன்னிலை நிலவரம்!
Election 2024 TN Vote Counting 10 am
இன்று காலை முதல் மக்களவைப் பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,
சிவகங்கை தொகுதிகள் காங்கிரஸ் கட்சி 5000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறது.
ஈரோடு தொகுதிகள் திமுக 13,000 வாக்குகள் வித்தியாசத்திலும்,
சேலம் தொகுதிகள் திமுக மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும்,
நாமக்கல் தொகுதிகள் அதிமுக 418 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
இதேபோல் தூத்துக்குடியில் கனிமொழி 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றனது.
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 244 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறது.
வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் 21,000 வாக்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய தொகுதிகளிலும் திமுகவே தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், விழுப்புரம் தொகுதிகள் விசிக்கவும் முன்னிலை பெற்று வருகின்றன.
திருவண்ணாமலை, ஆரணி, பொள்ளாச்சி, தென்காசி ஆகிய தொகுதிகளிலும் திமுக முன்னிலை பெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், மதுரை ஆகிய நான்கு தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. மயிலாடுதுறை, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.
கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் பதினோராயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
தேனி, நீலகிரி ஆகிய தொகுதிகளிலும் திமுக முன்னிலை பெற்று வருகிறது. ராமநாதபுரம், திருநெல்வேலி, கடலூர், திருச்சி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக 2775 வாக்குகள் வித்தியாசத்திலும், தர்மபுரி தொகுதியில் பாமக பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில், 36 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது, அதிமுக இரண்டு தொகுதிகளிலும், பாஜக கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
English Summary
Election 2024 TN Vote Counting 10 am