வாக்காளர்கள் பட்டியல் திருத்தும் பணி ஜூலை 21 முதல் தொடங்கும்.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!!
Election commission announced voter ID corrections from July21
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி அடுத்த மாதம் 21ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான அட்டவணையை, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வாக்கு சாவடி அலுவலர்கள் ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்டு 21ம் தேதி வரை வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 12ம்தேதி முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை வாக்குச்சாவடிகளை திருத்தி அமைத்தல் பணி நடைபெறும்.
அதனை ஒட்டி வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை திருத்துதல், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படத்தின் தரத்தை மேம்படுத்துதல் வாக்குச்சாவடிகளின் எல்லைகளை மறு சீரமைத்து ஒப்புதல் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் மாதம் 17ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றிலிருந்து நவம்பர் 30ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary
Election commission announced voter ID corrections from July21