சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்.. பயணிகள் கடும் அவதி.. ரயில்வே போலீசார் விசாரணை..!!
Electric train derailed in Chennai
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு நாள்தோறும் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை புறநகர் பகுதி மக்கள் மின்சார ரயில் சேவையை நம்பி இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஷன் பிரிட்ஜ் நிறுத்தத்தின் அருகே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிளாட்பான்களுக்கு ரயில்கள் பிரித்து அனுப்பப்படுகிறது. அந்த இடத்தில் சென்று கொண்டிருந்த சென்னை சென்ட்ரல் திருவள்ளூர் இடையிலானா மின்சார ரயிலின் கடைசி 2 பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. ரயில் பயணத்தை அனைத்து பயணிகளும் உடனடியாக ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
தடம் புரண்ட மின்சார ரயிலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று கடந்த மே 8ம் தேதி நள்ளிரவில் பேஷன் பிரிஜ் பணிமனை அருகே ஜன சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு சக்கரங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
பேஷன் பிரிஜ் பகுதியில் ரயில் தடம் புரளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் தொடர்ந்து கண்காணித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Electric train derailed in Chennai