பராமரிப்பு பனி - சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து.! - Seithipunal
Seithipunal


பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், ரெயில் விபத்துகளை தடுக்கும் வகையிலும் ஒவ்வொரு மதமும் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே வருகிற 13 மற்றும் 15 உள்ளிட்ட இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணி, 9.00 மணி, 9.30 மணி, 10.30 மணி மற்றும் 11.35 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் காலை 9.55 மணி, 11.25 மணி, மதியம் 12.00 மணி, 1.00 மணி, 2.30 மணி மற்றும் மாலை 3.15 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.35 மணி, 10.15 மணி, மதியம் 12.10 மணி,1.05 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதே தேதியில் காலை 11.45 மணி, மதியம் 1.15 மணி, 3.10 மணி மற்றும் இரவு 9.00 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40 மணி, மதியம் 12.40 மணி உள்ளிட்ட நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதே தேதியில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் 13 மற்றும் 15 உள்ளிட்ட தேதிகளில் மாலை மூன்று மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

electric train service cancelled in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->