ஆங்கில புத்தாண்டு - புறநகர் ரெயில் சேவையில் மாற்றம்..!
electric train service change for new year in chennai
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்காக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் தினந்தோறும் புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரெயில் சேவையை மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்" என்றுத் தெரிவித்துள்ளது.
English Summary
electric train service change for new year in chennai