வாடிப்பட்டி அருகே ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மின்கசிவு; பிளஸ்-2 மாணவர் பலி..!
Electrocution during Aadal Paadal program near Vadipatti Plus 2 student dies
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த சேடபட்டி அருகேயுள்ள அல்லிகுண்டம் கிராம் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை ஏராளாமானோர் கண்டு கழித்து கொண்டிருந்த நேரத்தில், இதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடைய மகன் 17 வயதுடைய பாண்டி பிளஸ்-02 மாணவன்.
இவர் குறித்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை மேடை அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஒலிபெருக்கி மற்றும் மின்விளக்குகளுக்காக அமைத்திருந்த மின் வயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதை கவனிக்காத நிலையில் மாணவர் பாண்டி மீது அந்த மின் வயர் பட்டதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாணவரை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாண்டியை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பாண்டி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்த அசம்பாவிதம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அல்லிகுண்டம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Electrocution during Aadal Paadal program near Vadipatti Plus 2 student dies