5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு - தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
emergency ward open in five hospitals at tamilnadu
ஐந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மூன்று மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படும் என்று கடந்த 2024-25ம் ஆண்டின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், ஐந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைப்பதற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;- "5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மூன்று மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மேட்டுபாளையம் அரசு மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஐந்து அரசு மருத்துவமனைகளில் தலா 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தபடவுள்ளது.
கும்பகோணம், தென்காசி, காங்கேயம் உள்ளிட்ட மூன்று அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
emergency ward open in five hospitals at tamilnadu