தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பிய அமலாக்கத்துறை! மணல் விற்பனை விவகாரத்தில் மீண்டும் நெருக்கடியா?  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் 34 இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். 6 மாவட்டத்தில் உள்ள 8 மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தினர். 

மேலும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். அதன்படி ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. 

மேலும் மணல் குவாரிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 

இதனை அடுத்து குவாரிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் மற்றும் விற்பனை செய்யப்படும் மணல் அளவு போன்றவற்றை குறித்தும் கணக்கிட்டனர். 

இந்த சோதனையை போலி பதிவுகள் மூலம் குவாரிகளில் மணல் விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் அமலாக்க துறையினர் மேற்கொண்டனர். 

இதன் மூலம் ஜி.எஸ்.டி வரி உயர்வு இருப்பதையும் அமலாக்க துறையினர் கண்டுபிடித்தனர். இதனால் தமிழக அரசின் நீர்வளத் துறைக்கு அமலாகத் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த கடிதத்தில், தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து நடந்து வரும் ஆற்று மணல் விற்பனை மற்றும் மணல் சேமிப்பு ஒப்பந்த விவரங்கள் போன்ற தகவல்களை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 

மணல் விற்பனை விவகாரத்தில் அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையால் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Department letter to  sent Tamil Nadu Government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->