"அரசு அலுவலருக்கே இந்த நிலையா"..!! விஏஓ படுகொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அடுத்த முறாப்பநாடு கிராம அலுவலராக  பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் என்பவர் இன்று அவருடைய அலுவலகத்தில் பணியில் இருந்த பொழுது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். 

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த லூர்து பிரான்சிசை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிசை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி இவ்வரசை சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன், அதற்கு இவ்வரசு பாராமுகமாய் இருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மீதும் அரசு அதிகாரிகளின் மீதும் எந்த அக்கறையும் இன்றி இருப்பது மிகுந்த கண்டனத்துக்கு உரியது.

ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? நாடக அரசியலை மட்டுமே கவனம் செலுத்தும் இந்த விடியா அரசின் முதல்வர் இனியாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திட்டவட்டமாக வலியுறுத்துகிறேன்" எனத் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS condemns Tuticorin VAO Loorthu Francis murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->