முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்..!! எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் தந்தை நேற்று இரவு காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை தவசலிங்கம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். 

தவசலிங்கம் அவர்களுக்கு தற்பொழுது 93 வயது நிறைவடைந்த நிலையில் காலமானார். இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தந்தையின் இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குடும்பத்தினருக்கு அதிமுக தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், அருமை சகோதரர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களின் தந்தை திரு.தவசிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவிப்பத்தோடு , அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

அதே போன்று அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், அண்ணன் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களின் தந்தையார் திரு.தவசிலிங்கம் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அன்புத் தந்தையை பிரிந்து வாடும் அண்ணன் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS condoles ex minister Rajendra Balaji father death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->